கோழிக்கடையில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே குலையன்கரிசல் கிராமத்தை சேர்ந்த நாராயணன், 38, என்பவர், ஸ்பிக்நகரில், கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று அதிகாலையில் கடைக்கு சென்ற நாராயணன், இறைச்சிக்காக கோழிகளை சுத்தப்படுத்தும் இயந்திரத்தின் அருகே சென்றபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழந்தார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த நாராயணனுக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement