பருவ நிலை மாற்றத்தால் வரத்து குறைந்து விலை அதிகரிப்பு தேங்காய், கொப்பரைக்கு ஊக்கத்தொகை வழங்க யோசனை

ஈரோடு: பருவ நிலை மாற்றம், மழை குறைவு, தேவை அதிகரிப்பால் தேங்காய், கொப்பரை தேங்காய் வரத்து குறைந்து விலை அதிக-ரித்துள்ளது.


தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, தஞ்சை, திருவாரூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் அதிகமாகவும், கரூர், திண்-டுக்கல், திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி, நாகை, புதுக்-கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் பகுதியாகவும் தென்னை பயிரிடுகின்றனர். ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்டத்தில் சொசைட்டி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களாக பெருந்துறை, அவல்பூந்துறை, எழுமாத்துார், மொடக்குறிச்சி, சிவகிரி, காங்கேயம், வெள்ளகோவில் உட்பட, 15க்கும் மேற்-பட்ட இடங்களில் தேங்காய், கொப்பரை தேங்காய் அதிகமாக விற்பனையாகிறது.கடந்த சில ஆண்டுகளாக, பருவ நிலை மாற்றத்தால், தேங்காய் உற்பத்தி குறைந்தது. வடமாநிலங்களில் அதிகமாக தேங்காயை உணவுக்கு பயன்படுத்துவதும், எண்ணெய் கொள்முதல் அதிகரிப்-பாலும், கொப்பரை தேங்காய் தேவை அதிகரித்துள்ளதாலும், தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை அதிகரித்து வருகி-றது.
இது குறித்து, தமிழக விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட தலைவர் பெரியசாமி கூறியதாவது:
பருவ நிலை மாறியதால், மரத்தில் காய் கட்டவில்லை. முன்பு மரத்துக்கு, 200 முதல், 300 காய் காய்த்த நிலையில் தற்போது, 100 முதல், 150 காய் காய்க்கிறது. இரண்டு பெரிய காய் - 1 கிலோ எடை இருக்கும். மூன்று சிறிய காய் - 1 கிலோ எடை வரும். தற்போது, 4, 5 காய் வைத்தால்தான், 1 கிலோ எடை நிற்-கிறது.
தென்னையில், 90 நாட்களுக்கு ஒரு முறை காய் பிடிக்கும். ஒரு மரத்தை, 1,000 ரூபாய்க்கு ஏலமெடுத்து காய் பறிப்பர். தற்-போது, 700 ரூபாய்க்குள் கேட்கின்றனர். அதிகமாக காய் காய்த்து, விலையும் அதிகம் இருந்தால், விவசாயிகள் லாபம் பெறுவர். தற்-போது காய் குறைவாக காய்ப்பதுடன், எடை இல்லாமல் உள்-ளதால் லாபமில்லை. 'நாபெட்' (நேஷனல் அக்ரிகல்சுரல் கோ-ஆப்ரேட்டிவ் மார்க்கெட்டிங் பெடரேஷன் ஆப் இந்தியா) குறிப்பிட்ட மாதங்கள் மட்டும், அரவை கொப்பரை ஒரு கிலோ, 111.60 ரூபாய்க்கும், பந்து கொப்பரையை, 120 ரூபாய்க்கும் கொள்முதல் செய்கிறது. அவர்கள் குறிப்பிடும் தரத்தில் குறைந்த அளவே விற்க இயலும். கொப்பரை தேங்காய்க்கும், தென்னை வளர்ப்புக்கும் அரசு சார்பில் ஊக்கத்தொகை வழங்கலாம். 'நாபெட்' ஆண்டு முழுவதும் கொள்முதல் செய்தால், தரமான கொப்பரைக்கு கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பாகும்.
இவ்வாறு கூறினார்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் அதிகாரிகள் கூறியதாவது:
செப்., முதல் நவ., வரை தேங்காய் சீசன். மீண்டும் பிப்., முதல், மூன்று மாதம் சீசனாகும். இந்தாண்டு தேங்காய், கொப்-பரை வரத்தும், காய் அளவும் குறைந்துள்ளது. முன்பு ஒரு பெரிய காய், 400 முதல், 600 கிராமும், சிறிய காய், 200 முதல், 300 கிராமும் இருக்கும். தற்போது, பாதி எடைதான் உள்ளது. கொப்-பரை தேங்காயை, முதல், இரண்டாம் தரம் என பிரித்து கொள்-முதல் செய்கிறோம்.
முதல் தரம் என்பது, பெரிய, தடிமனான, தரமான கொப்பரை தேங்காயாகும். 'நல்ல பிரவுன்' நிறத்தில் இருக்கும். தேங்காயை உடைத்து உலர வைத்தால், வெளிப்புறம் சுருக்கம் இருக்கக்கூ-டாது. உட்புறம் மஞ்சள் நிறம் படிதல், அழுகல் இருக்கக்கூடாது. இதில் எண்ணெய் எடுத்தால் அழுகல் வாடை வராது. மணமாக இருக்கும்.
இரண்டாம் தரத்தில், அழுகல், பூஞ்சானம் பற்றிய, தேங்காய் தொட்டி ஒட்டிய பருப்பாகும். இதில் எண்ணெய் எடுத்தால் சிக்கு வாடை வரும். உதாரணமாக பெருந்துறை சொசைட்டியில் புதன் மற்றும் சனிக்கிழமை கொப்பரை தேங்காய் ஏலம் நடக்கும். சராச-ரியாக, 3,000 முதல், 5,500 மூட்டை வரத்தாகும். இது, 1.50 லட்சம் கிலோ முதல், 2.25 லட்சம் கிலோ வரையாகும். முதல் தரம் 40 முதல், 45 சதவீதமும், இரண்டாம் தரம் மீதமுமாக இருக்கும்.
கொப்பரை விலை என்பது, கொப்பரை தேங்காய் வரத்து, தேங்காய் எண்ணெய் உற்பத்தி மற்றும் தேவைக்கு ஏற்ப மாறும். கொப்பரை தேங்காயை அரசு கொள்முதல் செய்து, பாதுகாத்து யாரிடமும் விற்க இயலாது. எண்ணெய் ஆலைகள், மருத்துவ பயன்பாடு, வியாபாரிகள் மட்டுமே வாங்குவர்.
கொப்பரை தேங்காயை பொறுத்தவரை, மிக மோசமானவை தவிர, மற்றவை முழுமையாக விற்பனையாகும். ஊக்கத்தொ-கையை அரசு அறிவித்தால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை அல்லது லாபம் கிடைக்கும்.
16 மூட்டை கொப்பரை
ஈரோடு மாவட்டம், அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு நேற்று, 16 மூட்டைகளில் கொப்பரை தேங்காயை விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 123.29 முதல், 142.29 ரூபாய் வரை விற்பனையானது. மொத்தம், 288 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், 37 ஆயிரத்து, 233 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement