ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் திருவண்ணாமலையில் தற்கொலை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள சூரியலிங்கம் அருகில் உள்ள டிவைன் பார்ம் ஹவுஸ் அமைந்துள்ள உள்ள தங்கும் அறையில் சென்னையைச் சென்ற நான்கு நபர்கள் நேற்று முன்பதிவு செய்து வந்து தங்கியுள்ளனர்.
இன்று காலையில் ஊழியர்கள் வந்து அறை கதையை தட்டியும் திறக்கப்படாததால் இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அறையில் நான்கு பேர் இறந்த நிலையில் உள்ளதை அறிந்தனர்.

பின்னர் இறந்தவர்கள் குறித்து அறையில் தேடிய போது இறந்தவர்கள் நான்கு பேரும் சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர்கள் என்றும்,
இறந்தவர்கள் கணவன் மகா காலவியாசர் (வயது 45) மனைவி ருக்மணி பிரியா (வயது40) என்று தெரியவந்தது.


மனைவி ஏற்கனவே விவாகரத்து பெற்ற நிலையில் தற்போது இவரோடு வாழ்ந்து வருகிறார் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் ருக்மணி பிரியாவுக்கு 16 வயதில் முகுந்த் ஆகாஷ் குமார் என்ற ஒரு மகனும், 20 வயதில் ஜலந்தரி ஒரு மகளும் உள்ளனர். நேற்றுதான் இந்த பண்ணை வீட்டில் வந்து தங்கி உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.
அறையில் இறந்தவர்கள் ஒரு கடிதத்தை எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். தாங்கள் இறைவனை நோக்கி பயணிப்பதாக கடிதம் எழுதி வைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளனர்.
இறந்த 4 பேரின் பேரின் உடல்களை திருவண்ணாமலை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிய போலீசார், சம்பவம் பற்றி விசாரிக்கின்றனர்

Advertisement