தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸ் திருநெல்வேலியில் அதிரடி சோதனை!

31

திருநெல்வேலி: திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அமரன் படம் திரையிடப்பட்ட தியேட்டரில் பெட்ரோல் குண்டுகள் வீசிய சம்பவத்தில் கைதானவர்களின் வீடுகளில் இன்று (டிச.,28) காலை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.


திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அலங்கார் தியேட்டரில் அமரன் படம் திரையிடப்பட்டிருந்தது. இந்த தியேட்டர் மீது நவ.16ம் தேதி அதிகாலையில் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை. கட்டடம் சேதம் இல்லை. இருப்பினும் குண்டு வீச்சு சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தியது.


இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் விஜயகுமார் தலைமையில் தனிப்படையினர் , பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 10 பேரை பிடித்து விசாரித்தனர். குண்டு வீசிய இருவர் சிக்கினர்.


இந்நிலையில், இன்று (டிச.,28) கைதானவர்களின் வீடுகளில் இன்று (டிச.,28) காலை தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலப்பாளையம் பஷீரப்பா தெருவை சேர்ந்த முகமது யூசுப் ரசின், மேலப்பாளையம் ஆசிரான் மேலத் தெருவை சேர்ந்த செய்யது முகமது புகாரி (29) ஆகியோருக்கு தொடர்புடைய வீடுகளில் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

Advertisement