விஜயகாந்த் குரு பூஜை அன்னதானம் வழங்கல்


விஜயகாந்த் குரு பூஜை
அன்னதானம் வழங்கல்
ஆத்துார், டிச. 29-
தே.மு.தி.க., நிறுவனர் விஜயகாந்த் நினைவு நாளை, அக்கட்சியினர், குரு பூஜையாக அனுசரித்து வருகின்றனர். நேற்று, ஆத்துார், ராணிப்பேட்டை, பழைய பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, காமராஜர் சாலை, கோட்டை, உடையார்பாளையம், நரசிங்கபுரம் உள்ளிட்ட இடங்களில், தே.மு.தி.க., சார்பில் விஜயகாந்த் படங்களை வைத்து,
அக்கட்சியினர் வழிபட்டனர்.
ஆத்துார் நகர, மாவட்ட தே.மு.தி.க., சார்பில், மாவட்ட துணை செயலர் சந்திரன் தலைமையில் கட்சியினர், ராணிப்பேட்டையில் விஜயகாந்த் படத்துக்கு மாலை அணிவித்து வழிபட்டனர். தொடர்ந்து, 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கினர். பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேஷ், அவைத்தலைவர் பெருமாள், தி.மு.க., - அ.தி.மு.க., உள்பட பல்வேறு மாற்றுக்கட்சியினரும்,
அஞ்சலி செலுத்தினர்.

Advertisement