ஆபத்தான நிலையில் உள்ள மின்கம்பம் மாற்றப்படுமா?

மதுராந்தகம்:மதுராந்தகம் -சூனாம்பேடு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பிரிந்து, கெண்டிரச்சேரி ஊராட்சிக்கு செல்லும் சாலை உள்ளது.

இந்த சாலை ஓரம், ஊராட்சி பகுதியில் உள்ள வீட்டு மின் இணைப்புகள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் மின் மோட்டார் இணைப்புகளுக்கு, மின்சாரம் செல்லும் மின்கம்பம் உள்ளது.

இந்த கம்பத்தில், சிமென்ட் பூச்சு உதிர்ந்து, துருப்பிடித்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன.

எனவே, சாலையோரம் அபாய நிலையில் உள்ள, மின்கம்பத்தை மாற்றி அமைக்க, மின்வாரியத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement