'அபாகஸ்' பள்ளி 21ம் ஆண்டு விழா

திருப்பூர் : திருப்பூர் அபாகஸ் சர்வதேச மாண்டிசோரி பள்ளியின் 21ம் ஆண்டு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக கோவை வி.ஜி.எம்., மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் சுமன் மற்றும் பள்ளி தாளாளர் வெங்கடாசலம், செயலாளர் சுரேஷ் பாபு, நிர்வாக இயக்குனர் அப்னா சுரேஷ்பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

பள்ளி முதல்வர் ராஜிவ் ரிஷி மங்கலம், பள்ளிச்சாதனைகளை ஆண்டறிக்கையாக வாசித்தார்.

'அவதார்' படத்தை கலைநிகழ்ச்சி மூலம் மாணவர்கள் கண் முன் நிறுத்தினர். பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் நடனமாடி அசத்தினர்.

Advertisement