பள்ளிகளுக்கான விருது வழங்கும் விழா

திருப்பூர் : மெட்ரிக் மற்றும் சுய நிதி பள்ளிகள் கூட்டமைப்பு சார்பில், பள்ளி களுக்கான விருது வழங்கும் விழா நடந்தது.

கடந்த கல்வியாண்டில் (2023-24), பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு விருது வழங்கும் விழா, ஊத்துக்குளி கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

பள்ளி முதல்வர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பாராட்டி, கவுரவிக்கப்பட்டனர். விழாவுக்கு, கொங்கு மெட்ரிக் பள்ளியின் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான, கொங்கு மெட்ரிக் பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உதயகுமார், மாவட்ட கல்வி அலுவலர்கள் தேவராஜன், காளிமுத்து, பழனி மற்றும் அருள்ஜோதி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். கல்வியில் சிறந்த சாதனை படைத்த பள்ளிகளை வாழ்த்தி பரிசு வழங்கி பாராட்டினர்.

சிறப்பாக பணியாற்றிய, 130 பள்ளிகளின் முதல்வர்கள், 130 பள்ளிகள் மற்றும் பள்ளிகள் அளவில் சிறப்பிடம் பெற்ற, 250 மாணவ, மாணவியர்கள், 70 ஆசிரியர்கள், பரிசு வழங்கி, கவுரவிக்கப்பட்டனர்.

திருப்பூர் டீ பப்ளிக் மெட்ரிக் பள்ளி முதல்வர் டோரத்தி ராஜேந்திரன் நன்றி கூறினார்.

Advertisement