குகேஷின் உறுதியும் அர்ப்பணிப்பும் என்னை கவர்ந்தது: நேரில் அழைத்து மோடி பாராட்டு

3

புதுடில்லி: குகேஷின் உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது என உலக செஸ் சாம்பியன் பட்டம் பெற்ற குகேஷை பிரதமர் மோடி இன்று நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினார்.

சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனை வீழ்த்தி இந்திய வீரர் குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். இதன் மூலம் 18 வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

இன்று ( டிச.,28) குகேஷை பிரதமர் மோடி அவரது அலுவலக இல்லத்திற்கு நேரில் அழைத்தார். அவரிடம் கலந்துரையாடியதுடன் குகேஷை பாராட்டி வாழ்த்தி செஸ் போர்டு ஒன்றையும் பரிசாக அளித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது ‛எக்ஸ்' தளத்தில் பதிவேற்றியது , குகேஷை நேரில் அழைத்து சிறந்த கலந்துரையாடல் நடத்தினேன் .அவரது உறுதியும், அர்ப்பணிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொருவரின் வெற்றியிலும் அவரது பெற்றோர்கள் உள்ளனர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Advertisement