ஷூ கம்பெனியை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே சம்பளம் வழங்காத ஷூ கம்பெனியை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம், காந்தி நகர் பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சா-லையில், 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரு-கின்றனர். இவர்களுக்கு கடந்த சில மாதங்களாக ஊதியம் வழங்-காததால், 30க்கும் மேற்பட்டோர் பணியிலிருந்த விலகி சென்-றனர்.
மேலும், தொழிற்சாலை நிர்வாகத்திடம் சம்பள பாக்கியை வழங்-குமாறு அனைத்து தொழிலாளர்களும் வலியுறுத்தி வந்தனர்.
ஆனால், தொழிற்சாலை நிர்வாகம் ஊதியம் கொடுக்காமல் அலைக்கழித்து வந்தது. நிர்வாகத்திடம் தொழிலாளர்கள் முறை-யிட்டும் உரிய பதில் அளிக்கவில்லை.
இதில் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலையின் முன் ஒன்றாக திரண்டு முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்-டனர்.
தகவலறிந்த வாணியம்பாடி தாலுகா போலீசார், தோல் தொழிற்-சாலை நிர்வாத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது நிர்வாகம், விரைவில் சம்பளம் வழங்குவதாக ஒப்பு கொண்டதை-யடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.