கடும் பனிப்பொழிவு: காஷ்மீரில் விமான சேவை ரத்து

ஸ்ரீநகர்: இடைவிடாத பனி மற்றும் மழை பெய்ததால், ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.


ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், தொடர் பனிப்பொழிவு மற்றும் பார்வைத்திறன் மிகக் குறைவாக இருப்பதால், விமான நிலையத்திற்குச் செல்லும் மற்றும் புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பிர் பஞ்சால் சுரங்கப்பாதைக்கும் ஸ்ரீநகர் நகருக்கும் இடையே நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிக்கியதால் ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது.

அதிகாரிகளின் துரித பணிகளால், சிக்கித் தவித்த வாகனங்கள் மீட்கப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் மற்றும் நெடுஞ்சாலையில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ராணுவத்தினர் உதவினர்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement