உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி; இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன்!
புதுடில்லி: அமெரிக்காவில் நடந்த உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அசத்தி உள்ளார்.
அமெரிக்காவில், உலக மகளிர் ராபிட் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்தோனேஷியா வீராங்கனை ஐரீன் சுகந்தரை எதிர்கொண்டு களம் இறங்கிய, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி, 11 புள்ளிகளில் 8.5 புள்ளிகளுடன் போட்டியை முடித்தார். இதனால், இந்தோனேஷியா வீராங்கனையை வீழ்த்தி இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் பெற்றார்.
சாம்பியன் பட்டம் வென்ற, கொனேரு ஹம்பியை பல்வேறு தரப்பினர் பாராட்டி வருகின்றனர். சர்வதேச அளவில் செஸ் போட்டியில் சாதனை படைத்த ஜூடித் போல்கர், சூசன் போல்கர், விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் மற்றும் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா என பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
யார் இந்த கொனேரு ஹம்பி?
* ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர் தான் கொனேரு ஹம்பி. இவருக்கு வயது 37.
* இவர் செஸ் போட்டியில் பல்வேறு பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
* அதிக முறை சாம்பியன் பட்டம் வென்றவர்கள் பட்டியலில் கொனேரு ஹம்பி இரண்டாவது இடத்தில் உள்ளார்.
* 2012ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ராபிட் செஸ் உலக தொடரில் கொனேரு ஹம்பி வெண்கல பதக்கம் வென்றார்.
* 2019ம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்த தொடரிலும் ஹம்பி சாம்பியன் பட்டம் வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
*சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் குகேஷ், சீனாவின் டிங் லிரனை தோற்கடித்து சாம்பியனாக வெற்றி பெற்றார்.