'பலே' பேட்டரி திருடன் சிக்கினான்

ஆவடி: ஆவடி அடுத்த கீழ்க்கொண்டையார், வெள்ளாளர் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ், 40. இவர், முத்தாபுதுப்பேட்டை, கீழ்க்கொண்டையாரில், டிராக்டர் பழுது பார்க்கும் கடை நடத்தி வருகிறார்.

கடந்த 12ம் தேதி இரவு பழுது பார்க்க வந்த, 'டாரஸ்' லாரி மற்றும் டிராக்டர்கள், கடைக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்தன.

மறுநாள் காலை, கடைக்கு வந்த போது, வாகனங்களில் இருந்து, 10 பேட்டரிகள் திருடு போனது தெரிந்தது. இது குறித்து ஆவடி முத்தாபுதுப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.

பேட்டரி திருட்டில் ஈடுபட்டது, வேளச்சேரி, கண்ணகிதெருவைச் சேர்ந்த யாசின் முகமது, 35, என்பது தெரிய வந்தது. அவரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவரிடம் இருந்து, பேட்டரி திருட பயன்படுத்திய, 'போர்டு பிஜோ' கார் மற்றும் 60 பேட்டரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement