தமிழகத்தில் ஜன.4 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு; வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் இன்று (டிச.,29) முதல் வரும் ஜனவரி 4ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் இன்று (டிச.,29) முதல் வரும் ஜனவரி 4ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
MARI KUMAR - TIRUNELVELI,இந்தியா
29 டிச,2024 - 16:27 Report Abuse
மழை கொட்டட்டும்.... நாடு செழிகட்டும்
0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement