ஸ்பீட் டுவின் 900 க்ரூஸர் டிரையம்ப் 'டார்க் மாஸ்டர்'
'டிரையம்ப்' நிறுவனம், அதன் 'ஸ்பீட் டுவின் 900' என்ற க்ரூஸர் பைக்கை மேம்படுத்தி அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பைக்கின் முன்பதிவு ஆரம்பமாகி உள்ள நிலையில், வினியோகம் இந்த மாதம் முதல் துவங்க உள்ளது. இதன் விலை, 40,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மூன்று நிறங்களில் வரும் இந்த பைக், உபகரண மேம்பாடுகளுடன் புதிய டிசைனில் வந்துள்ளது. மெல்லிசான பின்புற பிரேம், குறைந்த எடை அலுமினியம் ஸ்விங் ஆர்ம், மறுசீரமைக்கப்பட்ட மட்கார்டு, பெரிய 320 எம்.எம்., முன்புற டிஸ்க் மற்றும் 250 எம்.எம்., பின்புற டிஸ்க், முன்புற யூ.எஸ்.டி., போர்க் சஸ்பென்ஷன் மற்றும் பின்புற அட்ஜஸ்டபில் டூயல் ஷாக் அப்சார்பர்கள், கருப்பு வெளிப்புற பாகங்கள் ஆகியவை இதில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்.
இன்ஜின் மற்றும் கியர்பாக்ஸில் எந்தவித மாற்றம் இல்லை என்றாலும், ஏ.பி.எஸ்., மற்றும் டிராக் ஷன் கண்ட்ரோல் ஆகியவை அடிப்படை அம்சங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், எல்.சி.டி., டிஸ்ப்ளேவுடன் கூடிய டி.எப்.டி., ஸ்கிரீன், எல்.இ.டி., லைட்டுகள், க்ரூஸ் கண்ட்ரோல், ஸ்மார்ட் போன் இணைப்பு உள்ளிட்ட பல வசதிகள் இதில் உள்ளன.
இன்ஜின் 900 சி.சி., பாரலல் டுவின், லிக்விட் கூல்டு
பவர் 65 ஹெச்.பி.,
டார்க் 80 என்.எம்.,
எடை 216 கிலோ