நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ்., கவாசாகியின் 'ஸ்போர்ட் டூரர் கிங்'
'கவாசாகி' நிறுவனம், அதன் 'நிஞ்சா 1100 எஸ்.எக்ஸ்.,' ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இது, 'நிஞ்சா 1000 எஸ்.எக்ஸ்.,' பைக்கிற்கு மாற்றாக வந்துள்ளது. இதை 50,000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். இதன் வினியோகம், இந்த மாதம் முதல் ஆரம்பம்.
'நிஞ்சா 1000 எஸ்.எக்ஸ்.,' பைக்கை ஒப்பிடுகையில், 50 சி.சி., கூடுதல் திறன் கொண்ட இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பவர் 6 ஹெச்.பி., டார்க் 2 என்.எம்., குறைக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை பயணத்தை மேம்படுத்தி மைலேஜை அதிகரிக்க, 5 மற்றும் 6வது கியர்கள் மறுசீரமைக்க பட்டுள்ளன.
பிரேக் திறனை அதிகரிக்க, பின்புற டிஸ்க் அளவு 10 எம்.எம்., அதிகரிக்கப்பட்டுள்ளது. டிசைனில் எந்த மாற்றங்களும் இல்லை என்றாலும், வெளிப்புற அழகை அலங்கரிக்க புதிய கிராபிக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. யூ.எஸ்.பி., சார்ஜிங் போர்ட், 4.3 அங்குல டி.எப்.டி., டிஸ்ப்ளே, குயிக் ஷிப்டர் வசதி, டிராக் ஷன் மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய எலக்ட்ரானிக்ஸ் அம்சங்கள் இதில் உள்ளன.
இன்ஜின் 1,099 சி.சி., 4 சிலிண்டர், லிக்விட் கூல்டு
பவர் 136 ஹெச்.பி.,
டார்க் 113 என்.எம்.,
எடை - 235 கிலோ