விஷ வாயு தாக்கி 4 தொழிலாளர்கள் பலி; குஜராத்தில் சோகம்

பரூச்: குஜராத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவால் 4 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்தனர்.


பரூச் பகுதியில் செயல்பட்டு வரும் குஜராத் ப்ளுரோகெமிக்கல் லிமிடெட் என்ற நிறுவனத்தில், நேற்றிரவு வழக்கம் போல ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். சுமார் 10 மணியளவில், நிறுவனத்தின் அடிதளத்தில் உள்ள சி.எம்.எஸ்., பிளாண்டில் பைப் லைனில் வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.


இதில், 4 ஊழியர்கள் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர். இதனையடுத்து, அவர்களை சக ஊழியர்கள் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து, அவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்

Advertisement