மலையாள சின்னத்திரை நடிகர் ஹோட்டல் அறையில் சடலமாக மீட்பு
திருவனந்தபுரம்: மலையாள தொலைக்காட்சி நடிகர் திலீப் சங்கர் திருவனந்தபுரத்தில் உள்ள ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார்.
திலீப்பின் திடீர் மரணம் மலையாள திரையுலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. அம்மையாரே மற்றும் பஞ்சாக்னி போன்ற பிரபலமான தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்றார்.
தொலைக்காட்சித் தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் இரண்டிலும் பல்துறை நடிப்பிற்காக அறியப்பட்ட திலீப் சங்கர், ரசிகர்களால் விரும்பப்பட்டவர்.
அவர் கடைசியாக நடந்து வரும் பஞ்சாக்னி சீரியலில் சந்திரசேனன் கேரக்டரிலும், சமீபத்தில் அம்மையாரேயில் பீட்டராக நடித்ததற்காக பாராட்டைப் பெற்றார்.
நடிகர் திலீப் சங்கர் மரணம் குறித்து தயாரிப்பாளர் கூறுகையில், 'அவர் கடைசியாக இரண்டு நாட்களுக்கு முன்பு செட்டை பார்வையிட்டார்.
படப்பிடிப்பில் இடைவேளை எடுத்துக் கொண்டிருந்தார். மீண்டும் செட்டில் இணைவதற்காக, ஹோட்டலில் தங்கியிருந்தார். அவர் சில உடல்நலப் பிரச்சினைகள் இருந்ததாக, அவரது நண்பர்கள் கூறினர். போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஹோட்டலில் தங்கியிருந்த போது,தனது அறையை விட்டு வெளியே வரவில்லை. அவரது மரணத்திற்கான காரணத்தை போலீஸ் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது என்றார்.