அடேயப்பா... கழுத்தில் 5 கிலோ நகை! திருப்பதியில் தரிசனம் செய்து அசத்திய பக்தர்

2

திருப்பதி; திருப்பதி கோவிலுக்கு 5 கிலோ தங்க நகை அணிந்து பக்தர் ஒருவர் தரிசனம் செய்ய வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.



திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு வேண்டுதல்களுடன் வரும் அவர்கள் ஏழுமலையானை தரிசித்து விட்டு செல்கின்றனர்.


இந் நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த கொண்டா விஜயகுமார் என்பவர் திருப்பதி கோவிலுக்கு வந்தார். ஆனால் அவர் சாதாரணமாக வரவில்லை. கழுத்தில் பிரம்மாண்டமான வகையில் 5 கிலோ எடை அளவுக்கு தங்க நகைகளை அணிந்து வந்துள்ளார்.


அவரைக் கண்ட பக்தர்கள் உள்ளிட்ட பலரும் ஆச்சரியம் அடைந்தனர். அவர்களில் சிலர், செல்பி போட்டோவும், வீடியோவும் எடுத்து மகிழ்ந்தனர். இதுகுறித்து விஜயகுமார் கூறியதாவது;


எனக்கு தங்கத்தின் மீது அதிக ஆர்வம். அதனால் தான் இப்படி 5 கிலோ நகைகளை அணிந்து கோவிலுக்கு வந்தேன். ஆனால் அனைவரும் இதை ஆச்சரியத்துடன் பார்ப்பார்கள் என்று தெரியவில்லை.


இவ்வாறு அவர் கூறினார்.


தங்க நகைகளுடன் பிரம்மாண்டமாக கோவிலில் வலம் வந்த கொண்டா விஜயகுமார், தெலுங்கானா மாநில ஒலிம்பிக் சங்க இணை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement