ரூ.754 கோடி ஆர்டரை கைப்பற்றிய சி.ஆர்.ஐ., பம்ப்ஸ்

கோவை:மஹாராஷ்டிர மாநில மின் வினியோக நிறுவனத்தின் 754 கோடி ரூபாய் மதிப்பிலான சோலார் பம்ப்களுக்கான ஆர்டரை, கோவை சி.ஆர்.ஐ., நிறுவனம் கைப்பற்றிஉள்ளது.


கோவையைச் சேர்ந்த சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் நிறுவனம், பல்வேறு துறைகளுக்கான பம்ப்
உற்பத்தியில், முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம், மஹாராஷ்டிர அரசின் எம்.எஸ்.இ.டி.சி.எல்., நிறுவனத்திடம் இருந்து, 25,000 சோலார் பம்ப்களுக்கான 754 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது.

Advertisement