பாத்ரூம் ஜன்னல் வழியே வீடு புகுந்து நகை திருட்டு

புளியந்தோப்பு, புளியந்தோப்பு, டிமலஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகன்பிரபு, 41; மருந்து கடை ஊழியர். வாடகை வீட்டின் முதல் தளத்தில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

கடந்த 30ம் தேதி கே.பி., பார்க் குடியிருப்பில் உள்ள அம்மாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். மீண்டும், 31ம் தேதி காலை வந்து பார்த்தபோது, கழிப்பறை ஜன்னல் கண்ணாடியில், இரண்டு கண்ணாடி காணாமல் போயிருந்தது. அதன் வழியே, வீட்டுக்குள் மர்மநபர்கள் வந்து சென்றது தெரிந்தது.

பீரோவில் இருந்த 2 சவரன் நகை மற்றும் வெள்ளி கொலுசு காணாமல் போயிருந்தது. இது குறித்து பேசின்பாலம் போலீசார் விசாரித்தனர். இதில், வீட்டின் பின்புறமுள்ள கழிப்பறைக்கான குழாயை பிடித்து மேலே ஏறி மர்மநபர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement