'டி - 20' கிரிக்கெட் பீனிக்ஸ் சி.டி., அணி வெற்றி
சென்னை,
சென்னையில், தீ புளூ ஸ்கை கிரிக்கெட் அகாடமி சார்பில், புளூ ஸ்கை ஸ்போர்ட்ஸ் லீக் போட்டிகள் நடக்கின்றன. இவற்றில், ஒன்பது அணிகள் பங்கேற்று, தலா ஒவ்வொரு அணிகளும் எட்டு போட்டிகள் வீதம், 'லீக்' முறையில் மோதி வருகின்றன.
அந்தவகையில், முகப்பேரில் உள்ள தனியார் கல்லுாரியில் நடந்த, 'லீக்' சுற்றில், மேகி சி.சி., மற்றும் பீனிக்ஸ் சி.டி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மேகி சி.சி., முதலில் பேட்டிங் செய்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 180 ரன்களை அடித்தது.
அடுத்து பேட்டிங் செய்த, பீனிக்ஸ் சி.டி., அணி, 16.3 ஓவர்களில் இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து, 184 ரன்களை அடித்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீனிக்ஸ் அணியின் வீரர் சுகாதர், 44 பந்துகளில் ஒன்பது சிக்சர், நான்கு பவுண்டரியுடன், 83 ரன்களை அடித்து வெற்றிக்கு உதவினார்.