19,000 பேருக்கு விருப்ப ஓய்வு பி.எஸ்.என்.எல்., அடுத்த முயற்சி
புதுடில்லி:பொதுத்துறை தொலைபேசி நிறுவனமான பி.எஸ்.என்.எல்., இரண்டாவது சுற்றாக, ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை அறிவிக்க திட்டமிட்டுஉள்ளது.
நிறுவனத்தின் செலவைக் குறைக்கும் நடவடிக்கையாக, விருப்ப ஓய்வை தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு செட்டில்மென்ட் வழங்க, மத்திய அரசிடம் 1,500 கோடி ரூபாயை பி.எஸ்.என்.எல்., கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நிறுவனத்தின் வருவாயில் 38 சதவீதம் வரை ஊதியமாக செலவிடும் நிலையில், விருப்ப ஓய்வில், கிட்டத்தட்ட 19,000 ஊழியர்களை விடுவித்தால், செலவை ஓரளவு கட்டுப்படுத்தலாம் என, பி.எஸ்.என்.எல்., கருதுவதாக தெரிகிறது.
இதற்கு நிதி அமைச்சகம் அனுமதி அளித்தால், மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் தொலைத்தொடர்பு துறை ஒப்புதல் கேட்டுப் பெற்று, திட்டம் செயல்படுத்தப்படும்.
முதல் விருப்ப ஓய்வு திட்டம் 2019ல் அறிவிப்பு
93,000 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றனர்
தற்போது மாத ஊதியத்துக்கு செலவாகும் ரூ.7,500 கோடியை, ரூ.5,000 கோடியாக குறைக்க இலக்கு