ரூ.2000 நோட்டுகளில் 98% வங்கிக்கு திரும்பியது
புதுடில்லி, மக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 98.12 சதவீதம் வங்கிக்கு திரும்பி விட்டதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2023, மே 19ம் தேதி, ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்ப பெறுவதாக அறிவித்தது.
அப்போது, 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
இந்நிலையில், ரிசர்வ் வங்கி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '2024, டிசம்பர் 31ம் தேதி நிலவரப்படி, பொதுமக்களிடம் புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளில், 98.12 சதவீதம் திரும்ப பெறப்பட்டுள்ளது.
'இன்னும், 6,691 கோடி ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் மக்களிடம் உள்ளன' என, கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement