கவனிக்கப்படாத மதுரா புதுார் சாலை 15 ஆண்டுகளாக 5 கிராமத்தினர் அவதி

சித்தாமூர்:சித்தாமூர் அடுத்த ஈசூர் கிராமத்தில் இருந்து மதுரா புதுார் செல்லும் 3 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.

இந்த சாலையை சிறுநகர், ஈசூர், புத்திரன்கோட்டை உள்ளிட்ட 5க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்த சாலை, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சிரமைக்கப்பட்டது.

தற்போது பராமரிப்பின்றி, ஜல்லிகள் பெயர்ந்து பள்ளங்கள் ஏற்பட்டு, சாலை படுமோசமான நிலையில் உள்ளது.

இதனால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

ஜல்லிகள் பெயர்ந்து உள்ளதால், இருசக்கர வாகனங்கள் அடிக்கடி பஞ்சராகி வருகின்றன. பலர் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டுமென, பல ஆண்டுகளாக இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர். தற்போது வரை சாலை சீரமைக்கப்படாததால், நாளுக்கு நாள் சாலையின் நிலை மோசமாகி வருகிறது.

எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement