புத்தாண்டை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
ஓசூர், ஜன. 2-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நள்ளிரவில் பட்டாசு வெடித்து பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டை வரவேற்றனர். ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவிலில், நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை பேட்டராய சுவாமி கோவில், சூளகிரி வரதராஜ பெருமாள் கோவில்களில் நேற்று அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. சூளகிரி அடுத்த பண்டப்பள்ளி கிராமத்தில், தென்பெண்ணை ஆற்றின் கரையில் உள்ள பைரேஷ்வரர் கோவில், கோபசந்திரம் தட்சிண திருப்பதி வெங்கடேஸ்வர சுவாமி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பெரிய மாரியம்மன் கோவில், ஜோதி விநாயகர் கோவில் தெருவில் உள்ள முத்து மாரியம்மன் கோவில், பழையபேட்டை அங்காளம்மன் கோவில், லட்சுமி நாராயணசுவாமி கோவில், நேதாஜி சாலை சமயபுரத்து மாரியம்மன் கோவில் உட்பட மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
*தர்மபுரி நெசவாளர் காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவிலில்,
சுவாமிக்கு நேற்று பால், பன்னீர், சந்தனம், இளநீர், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது.
பின், சுவாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டது. இதை, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதேபோல், தர்மபுரி எஸ்.வி.,ரோடு., சாலை விநாயகர் கோவில், கடைவீதி அம்பிகாபரமேஸ்வரி கோவில், கோட்டை மல்லிகார்ஜூனேஸ்வரர் கோவில், நெசவாளர்காலனி மஹாலிங்கேஸ்வரர் கோவில், செளடேஸ்வரி அம்மன் கோவில், கடைவீதி பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில், உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில், ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, நேற்று சுவாமிக்கு பல்வேறு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.