வீரகாரன் கோவில் திருவிழா கொடியேற்றம்


அதியமான்கோட்டை, ஜன. 2-
தர்மபுரி அடுத்த, அதியமான்கோட்டையில் உள்ள வீரகாரன், நாகத்தம்மன், காளியம்மன் கோவில்,
26ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பாலக்கோடு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அன்பழகன் கொடியேற்றினார்.
வீரகாரன், நாகத்தம்மன், காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பாப்பிரெட்டிபட்டி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். விழாவில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement