ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்



ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம்
ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஒகேனக்கல், ஜன. 2-
ஆங்கில புத்தாண்டு விடுமுறையொட்டி, ஒகேனக்கல் காவிரியாற்றில் நேற்று, ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த
சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு, கர்நாடகா, ஆந்திரா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான
சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைந்து, கடந்த, இரண்டு வாரமாக வினாடிக்கு, 3,500 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால், ஒகேனக்கல்லில் நீர் தேக்கம்
ஏற்பட்டுள்ளது.
நேற்று, புத்தாண்டு விடுமுறை என்பதால், ஒகேனக்கல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை, வழக்கத்தை விட பல மடங்கு அதிகரித்து காணப்பட்டது. இவர்கள், ஒகேனக்கல்லில் பிரசித்தி பெற்ற மீன் குழம்பு சமைத்து சாப்பிட்டும், காவிரியாற்றில் குளித்தும், பாறைகளுக்கு இடையே ஆற்றில் பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.
பரிசல்கள் கொத்திக்கல் பரிசல் துறையில் இருந்து, மெயின் பால்ஸ், மணல் திட்டு, பெரியபாணி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்பட்டதால், சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றின் எழில்மிகு அழகை கண்டு ரசித்தனர்.

Advertisement