நவோதயா பள்ளியில் வினாடி வினா போட்டி
புதுச்சேரி: ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு வினாடி வினா போட்டி நடந்தது.
புதுச்சேரியில் வரும் 12ம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து போலீசார் சிக்னல்கள், முக்கிய சந்திப்பு, பள்ளிகளில் ஹெல்மெட் அணிவதன் அவசியம், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சார்பில் பெரிய காலாப்பட்டு ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளியில் போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
போக்குவரத்து விழிப்புணர்வு தொடர்பாக மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, போக்குவரத்து சீனியர் எஸ்.பி., பிரவீன்குமார் திரிபாதி பரிசு வழங்கினார். முன்னதாக போக்குவரத்து விதிகள் மற்றும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து எஸ்.பி., மோகன்குமார் விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுலக்கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.