ரகசிய கேமரா பொருத்திய விவகாரம் ராமேஸ்வரம் குளியல் அறைக்கு சீல்

1

ராமேஸ்வரம்: ரகசிய கேமரா பொருத்திய விவகாரத்தில் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள குளியல் அறை, உடைமாற்றும் அறைகளுக்கு நேற்று வருவாய்த்துறையினர் சீல் வைத்தனர்.


ராமேஸ்வரம் கோவில் அக்னி தீர்த்த கடற்கரை அருகில் தனியாருக்கு சொந்தமான பெண் பக்தர்கள் குளியல், உடைமாற்றும் அறை உள்ளது. டிச.23ல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பெண் பக்தர்கள் சிலர் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி விட்டு இந்த அறைக்கு உடைமாற்ற சென்றனர். அறைக்குள் ரகசிய கேமரா பொருத்தி இருந்ததை பார்த்தவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.


இதையடுத்து இந்த அறையை நிர்வகித்த ராமேஸ்வரத்தை சேர்ந்த ராஜேஷ்கண்ணன், மீரான் மைதீனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதில் ராஜேஷ் கண்ணன் அலைபேசியில் பெண்கள் உடை மாற்றும் 120 வீடியோக்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


இதுகுறித்து விசாரித்த ராமநாதபுரம் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,உடைமாற்றும் அறையை சீல் வைக்க உத்தரவிட்டார்.


அதன்படி நேற்று ராமேஸ்வரம் கோவில் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் முருகேசன், வி.ஏ.ஓ., ரொட்ரிக்கோ, தனிப்பிரிவு போலீஸ்காரர் மணிமாறன் ஆகியோர் குளியல் அறை, உடைமாற்றும் அறைகளை பூட்டி சீல் வைத்தனர்.

Advertisement