புகார் பெட்டி..

பூங்கா சீரமைக்கப்படுமா

வேளங்கிராயன்பேட்டையில் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க நடவடிக்கை தேவை.

மூர்த்தி, வேளங்கிராயன்பேட்டை.

சாலை படுமோசம்

புதுச்சத்திரம் அடுத்த பால்வாத்துண்ணான் - மணிக்கொல்லை செல்லும் சாலை, பழுதடைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால், அரசு அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீரமணி, பால்வாத்துண்ணான்.

பொதுமக்கள் அவதி

விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிற்பதால், பயனாளிகள், மாற்றுத்திறனாளிகள் சென்று வர முடியாமல் சிரமமடைகின்றனர்.

கோபால், கம்மாபுரம்.

Advertisement