கிராம செயலக கட்டடம் : எம்.எல்.ஏ., திறப்பு

கடலுார்; கடலுார் அடுத்த எம்.பி., அகரம் ஊராட்சியில புதிய கிராம செயலக கட்டடத்தை அய்யப்பன் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.

கடலுார் ஒன்றியத்திற்குட்பட்ட எம்.பி.,அகரம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில், 42 லட்ச ரூபாய் மதிப்பில் கிராம செயலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு, நேற்று திறப்புவிழா நடந்தது.

கடலுார் எம்.எல்.ஏ.,அய்யப்பன் திறந்து வைத்தார். எம்.பி., அகரம் ஊராட்சி தலைவர் ஞானப்பிரகாசம் சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், நிலவள வங்கி தலைவர் ராமலிங்கம், ஊராட்சி தலைவர்கள் கமல், குமார், முத்துக்குமாரசாமி, பிரகாஷ், துணை பி.டி.ஓ., வெங்கடேசன், ஊராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement