சப்பாத்தி சுடும் குரங்கு மசாலா அரைக்கும், பாத்திரமும் கழுவும்: அசத்துகிறது ஆல் இன் ஆல் அழகு ராணி!

10

லக்னோ: உத்தரபிரதேசத்தில், குரங்கு ஒன்று சப்பாத்திக்கு மாவு உருட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலிக்கு அருகில் உள்ள காகிபூர் சத்வா என்ற சிறிய கிராமத்தில் ராணி என்ற குரங்கு வாழ்ந்து வருகிறது. குரங்காகப் பிறந்தாலும், மனிதனைப் போன்ற பழக்க வழக்கங்களாலும், உதவி செய்யும் குணத்தாலும் ஒட்டுமொத்த கிராமத்தினர் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த குரங்கு, 8 வருடங்களாக, அசோக் மற்றும் அவரது குடும்பத்தினருடன் வசித்து வருகிறது.


குடும்ப உறுப்பினர்களைப் போலவே வீட்டு வேலைகளைச் செய்து, அவர்களின் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாக குரங்கு மாறி உள்ளது. இந்த குரங்கு வீட்டு வேலை செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.பாத்திரங்களைக் கழுவுதல், சப்பாத்திக்கு மாவு உருட்டி தேய்ப்பது, சுடுவது, மசாலா அரைப்பது போன்ற பணிகளை செய்கிறது.



சமைக்கும் போதெல்லாம், ஆர்வத்துடன் உதவி செய்கிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அன்றாட வீட்டு வேலைகளை செய்யும் குரங்குகளை பார்த்து அனைவரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.

Advertisement