கரும்பு தோட்டங்களில் அதிகாரிகள் ஆய்வு

கரும்பு தோட்டங்களில்அதிகாரிகள் ஆய்வு
இடைப்பாடி, ஜன. 4-
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரருக்கு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதனால் கரும்புகளை கொள்முதல் செய்ய, சேலம் மாவட்டம், வாழப்பாடி கூட்டுறவு களஅலுவலர் பிருந்தா, பொது வினியோக திட்ட சார் பதிவாளர் சுஜன், பனமரத்துப்பட்டி கூட்டுறவு கள அலுவலர் சுமதி, பொது வினியோக திட்ட சார் பதிவாளர் சுகன்யா உள்ளிட்ட கூட்டுறவுத்துறை அதிகாரிகள், 30க்கும் மேற்பட்டோர் நேற்று, பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில் கரும்புகளின் உயரம், தரத்தை பார்வையிட்டனர். கூட்டுறவு, வேளாண் துறை உயர் அதிகாரிகளிடம் ஆலோசனை பெற்று, ஓரிரு நாட்களில், தேவையான அளவு கரும்புகள் கொள்முதல் செய்யப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement