கட்டுமான பொருள் கண்காட்சி அமைச்சர் துவக்கி வைப்பு
கட்டுமான பொருள் கண்காட்சி
அமைச்சர் துவக்கி வைப்பு
சேலம், ஜன. 4-
சேலம், 5 ரோடு ரத்தினவேல் ஜெயகுமார் மண்டபத்தில், இன்ஜினியர்ஸ் பில்டு எக்ஸ்போ கட்டுமான பொருட்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது. சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன், பில்ட் எக்ஸ்போ டைரக்டரியை வெளியிட, தமிழ்நாடு, புதுச்சேரி சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் கூட்டமைப்பு மாநில தலைவர் தேர்வு விஜயபானு பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அறக்கட்டளை, எஸ்.கே.எஸ்., மருத்துவமனை இணைந்து, இலவச மருத்துவ முகாமை நடத்தின. சேலம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை தலைவர் தேவிமீனாள் தொடங்கி வைத்தார். அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் ராஜ்குமார், கண் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.
கண்காட்சி காலை, 11:00 முதல் இரவு, 9:00 மணி வரை நடக்கிறது. அதில் கட்டுமானத்துறை தொடர்பாக, 150-க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம்பெற்றுள்ளதால் மக்கள் இலவசமாக பார்வையிடலாம். கண்காட்சி ஏற்பாடுகளை இன்ஜினியர்ஸ் பில்டு எக்ஸ்போ நடத்துனர் குழு தலைவர் கமல், பில்ட் எக்ஸ்போ சேர்மன் சரவணகுமார், ஆலோசகர் பி.ராஜூ, கையேட்டு குழு ஒருங்கணைப்பாளர் வி.ராஜூ, நடத்துனர் குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், சங்கர் கணேஷ், விஜயன், எக்ஸ்போ ஒருங்கிணைப்பாளர் மதனகோபால், பொருளாளர் மோகன்ராஜ் செய்திருந்தனர்.
மருத்துவ முகாம் ஏற்பாடுகளை, மருத்துவ முகாம் சேர்மன் பன்னீர்செல்வம், சேலம் சிவில் இன்ஜினியர்ஸ் அறக்கட்டளை தலைவர் மயில்ராஜூ, செயலர் குப்புசாமி, பொருளாளர் சங்கர், எக்ஸ்போ பொறியாளர்கள் செய்திருந்தனர்.