போலீஸ் செய்தி

பட்டாசு பறிமுதல்: 5 பேர் கைது



சாத்துார்: அப்பைய நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் சூரியகலா 60. இவருக்கு சொந்தமான இடத்தில் தகர செட்டில் சிவகாசியை சேர்ந்த முத்துமாரியப்பன்,41. கார்த்திக் 23, கருப்பசாமி 34. குருமீனா 36, முகேஷ் குமார் 20 ஆகியோர் பேன்சி ரக பட்டாசுகள் தயாரித்தனர். போலீசை பார்த்ததும் கருப்பசாமி தப்பி ஓடினார். சம்பவ இடத்தில் பட்டாசு தயாரிக்கப் பயன்படுத்தும் தராசு எடை கல், மூலப் பொருட்கள் மற்றும் பேன்சிரக பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து 6 பேர் மீது வழக்கு பதிந்து 5 பேரை கைது செய்து அப்பைய நாயக்கன்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

மாணவியை கையை பிடித்து இழுத்தவர் கைது



சாத்துார்: ஆலங்குளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி, 45. திருமணம் ஆனவர். அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது நர்சிங் படித்துவரும் மாணவியின் கையைப் பிடித்து இழுத்து அத்துமீறினார். ஆலங்குளம் போலீசார் கருப்பசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தற்கொலை



சிவகாசி: சிவகாசி நடுத்தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் 50. பெயிண்டர். சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் மது குடித்து வீட்டில் இருந்து வந்தார். சிவக்குமார் தனது மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவரது மனைவி சத்தம் போட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் சிவகுமார் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

மூதாட்டி பலி



சாத்துார்: சாத்துார் நள்ளியை சேர்ந்தவர் குருவம்மாள். 75. வீட்டில் மயங்கி விழுந்தார். துாத்துக்குடிஅரசு மருத்துவமனையில் பலியானார். சாத்துார் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement