ஸ்ரீவி., செண்பகத்தோப்பில் மீண்டும் இன்று முதல் மலையேற்றம் துவக்கம்
ஸ்ரீவில்லிபுத்துார்: வடகிழக்கு பருவ மழையால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர்செண்பகத் தோப்பிலிருந்துவ.புதுப்பட்டி வரையிலான மலையேற்ற திட்டம், இன்று முதல் மீண்டும் துவங்குகிறது.
தமிழகத்தில் இயற்கை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அக்டோபர் முதல் 40 வழித்தடங்களில் மலையேற்ற திட்டம் துவக்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் செண்பகத் தோப்பில் இருந்து வ.புதுப்பட்டி வரை 9 கிலோமீட்டர் தூரம் வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் வனத்துறையினர் மலையேற்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
இதில் உள்ளூர் மக்களை விட அருப்புக்கோட்டை, விருதுநகர், மதுரை பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் இதுவரை மலையேற்றம் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த மாதம் பெய்த கனமழையால் மலையேற்றம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுஇருந்தது .தற்போது வடகிழக்கு பருவமழை முடிந்துவிட்ட நிலையில் மீண்டும்மலைேயற்றம் திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதற்காக இணையதளம் மூலம் மதுரையைச் சேர்ந்த ஒரு குழுவினர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் இன்று மலையேற்றம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.