அமைச்சர் மீது நாடார் சங்கம் புகார்

சென்னை: தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ், சென்னை டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

மனுவில், அவர் கூறியிருப்பதாவது:

தமிழக பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, 'நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்' என, முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலை வாய்ப்பு அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசி உள்ளார்.

பொறுப்புள்ள அமைச்சரே, ஜாதி சங்கத்தின் தலைவர் போல பேசியுள்ளது, சமூக வலைதளங்களில் வெளியாகி, பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அமைதி பூங்காவான தமிழகத்தில், ஜாதி வெறியோடு அமைச்சர் பேசியிருப்பது தவறான செயல். அனைத்து சமூக மக்களுக்கும் பொதுவான அமைச்சர், தென் மாவட்டங்களில் ஜாதி ரீதியான படுகொலைகள் அதிகரித்து வரும் நிலையில், சட்டத்திற்கு புறம்பாக ஜாதி பெருமை பேசியது கண்டனத்துக்கு உரியது.

ஜாதி ரீதியான கலவரங்களை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள அமைச்சர் மூர்த்தி மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement