213 கைத்தறி நெசவாளருக்கு தறி உபகரணங்கள் வழங்கல்
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் கைத்தறி நெசவாளர்களுக்கு தறி உபகரணங்கள் வழங்கப்பட்டது. பரமக்குடி கைத்தறி உதவி இயக்குனர் சேரன் தலைமை வகித்தார். எமனேஸ்வரம் கைத்தறி குழும செயலாளர்கள் மோகனா, குபேந்திரன், கைத்தறி ஆய்வாளர் நாகேஸ்வரன் பங்கேற்றனர்.
சென்னை நெசவாளர் சேவை மைய தொழில்நுட்ப கண்காணிப்பாளர் திலீபன் உபகரணங்களை வழங்கினார். எமனேஸ்வரம் 1, 2 கைத்தறி குழுமத்தில் உள்ள 213 நெசவாளர்களுக்கு 1054 உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இதில் அச்சு விழுதுகள், தார் சுற்றும் இயந்திரம், ஜக்கார்டு பெட்டி, மின் மோட்டாருடன் கூடிய ஜக்கார்டு துாக்கும் இயந்திரம் மற்றும் சூரிய ஒளியில் இயங்கும் மின் விளக்குகள் வழங்கப்பட்டன.
இதன் மதிப்பு ரூ.1.29 கோடி. கைத்தறி ஆய்வாளர் ரத்தின பாண்டியன் நன்றி கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement