தமிழ் திரை விழா

திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி தமிழ்த்துறை சார்பில் தமிழ் திரை விழா கொண்டாடப்பட்டது. செயலாளர் குமரேஷ் துவக்கி வைத்தார்.

நிர்வாக குழு உறுப்பினர் வெங்கடேஸ்வரன், முதல்வர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் குபேந்திரன் வரவேற்றார். சாக்ரடீஸ் நாடகம் நடந்தது. முதலாம் ஆண்டு மாணவர்கள் ஏற்புரையாற்றினர். பேராசிரியர் ஊர்மிளா ஒருங்கிணைத்தார். தேர்வு கட்டுப்பாட்டாளர் துரைசாமி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Advertisement