பிரிமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டி வீராம்பட்டினம் அணி சாம்பியன்

புதுச்சேரி, : பக்கா பிரிமியர் லீக் டி.20 கிரிக்கெட் போட்டி யில் வீராம்பட்டினம் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் சார்பில், பாண்டிச்சேரி பக்கா பிரிமியர் லீக் டி 20 கிரிக்கெட் போட்டி போலீஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வந்தது. போட்டி யில் 8 அணிகள் பங்கேற்றன.

இறுதி போட்டியில் வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணியும், உப்பளம் ராயல்ஸ் அணியும் மோதின. முதலில் விளையாடிய உப்பளம் ராயல் அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழுந்து 153 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணி 16.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

வெற்றி பெற்ற அணிக்கு முதல்வர் ரங்கசாமி பரிசு மற்றும் கோப்பையுடன், ரூ.70 ஆயிரம் பரிசு வழங்கினார். இரண்டாவது இடம் பிடித்த உப்பளம் ராயல் அணிக்கு அக் ஷ தா பிக் கேப்பிட்டல் நிறுவனர் ஹரிதாஸ் பரிசு கோப்பை யுடன் ரூ. 40 ஆயிரம் வழங்கினார்.

மூன்றாவது இடம் பெற்ற கோரிமேடு பேன்ந்தர் அணிக்கு மருத்துவர் சரவணகுமார் பரிசு கோப்பையுடன் ரூ. 30 ஆயிரம் வழங்கினார்.

நான்காவது இடம் பிடித்த குமாரபாளையம் வாரியர்ஸ் அணிக்கு தமிழ்நாடு அரசு முன்னாள் செலக் ஷன் கமிட்டி சேர்மன் ஸ்ரீதர் பரிசு கோப்பையுடன் ரூபாய் 20 ஆயிரம் வழங்கினார்.

தொடர் நாயகன் விருது பெற்ற உப்பளம் ராயல்ஸ் அணியின் மூர்த்திக்கு ஆரோ பிட் ஜிம்மின் உரிமையாளர் முகுந்தன் பரிசு கோப்பையுடன் ஐந்தாயிரம் வழங்கினார். ஆட்டநாயகன் விருது வீராம்பட்டினம் ஷார்க்ஸ் அணியின் தமிழரசனுக்கு பரிசு கோப்பையுடன் 1,500 ரூபாய் வழங்கப்பட்டது.

தொடரின் சிறந்த பேட்ஸ்மேன் கோரிமேடு பேந்தர்ஸ் அணியின் பிரபுவுக்கு பரிசு கோப்பையுடன் 2,500 ரூபாயும், சிறந்த பந்துவீச்சாளராக குமாரபாளையம் வாரியர்ஸ் அணியின் சோமசுந்தரத்திற்கு பரிசு கோப்பையுடன் 2,500 ரூபாயும், சிறந்த பீல்டராக லாஸ்பேட் லிஜன்ஸ் அணியின் ஸ்ரீதருக்கு பரிசு கோப்பையுடன் 1500 ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது.

தொடரில் சிறப்பாக விளையாடி பெயர் பிளே அவார்டு பெற்ற திருவாண்டார் கோவில் டைட்டன்ஸ் அணிக்கு நினைவு பரிசு, சதம் அடித்த வீரர்கள் மற்றும் ஒரு போட்டியில் 6 விக்கெட் எடுத்த வீரர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஏற்பாடுகளை புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கத்தின் டோர்னமெண்ட் கமிட்டி சேர்மன் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement