திருக்குறள் போட்டி

புவனகிரி; புவனகிரியில் திருக்குறள் இயக்கம் சார்பில், திருக்குறள் போட்டி மற்றும் சிறப்பு வகுப்பு நடந்தது.

புவனகிரி ராகவேந்திரர் சிறப்பு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. அரசு மற்றும் தனியார் பள் ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். மாலையில் பரிசளிப்பு மற்றும் பேச்சரங்கம் நடந்தது. அவ்வை யார் என்ற தலைப்பில் தனலட்சுமி, திருக்குறளில் 27வது அதிகாரம் குறித்து வள்ளலார் தொண்டர் உலகநாதன் ஆகியோர் பேசினர்.

Advertisement