சாலையோர பள்ளத்தால் விபத்து அபாயம்

ஸ்ரீமுஷ்ணம்; ஸ்ரீமுஷ்ணத்தில் சாலையோரம் உள்ள மெகா சைஸ் பள்ளம் காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

ஸ்ரீமுஷ்ணத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் சாலையில் மலைமேடு எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் அரசு மாணவியர் விடுதி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் இந்த விடுதிக்கு எதிரே உள்ள சாலை ஓரத்தில் தண்ணீர் ஓடியதால் மெகா சைஸ் பள்ளம் ஏற்பட்டது.

பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மூடாமல் இருப்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர்தவறி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் இந்த சாலையில் தாலுகா அலுவலகம், பள்ளிகள் இருப்பதால் சைக்கிளில் செல்லும் மாணவ மாணவிகள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. எனவே, பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் முன்பு சாலையோர பள்ளத்தை மூட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement