300 கிலோ புகையிலை சிக்கியது 3 பேர் கைது; 2 கார் பறிமுதல்
ஓமலுார்: சேலம் மாவட்டம் காமலாபுரத்தில், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், ஓமலுார் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஸ்கார்பியோ, ஸ்விப்ட் கார்களை நிறுத்திய-போது நிற்காமல் செல்ல முயன்றனர். ஆனால் போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, 300 கிலோ புகையிலை பொருட்கள், மூட்டைகளில் இருந்தன. இதனால் இரு கார்க-ளுடன் புகையிலை பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்-தனர். மேலும், கார்களில் இருந்த, 3 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், 'ஓசூரில் இருந்து தென்கா-சிக்கு புகையிலை கடத்த முயன்ற, தென்காசி, ஆலங்குளத்தை சேர்ந்த வேலுசாமி, 47, முத்துக்குமார், 37, முத்துராஜா, 30, ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அடிக்கடி இச்-சம்பவத்தில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்-பட்ட கார்களும், திருட்டு வாகனமா என விசாரணை நடக்கிறது'
என்றனர்.