பெரியப்பா தலையை வெட்டி வீசிய வாலிபர்
பெத்தநாயக்கன்பாளையம்: சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த புத்திரக-வுண்டன்பாளையம் ஊராட்சி குறிச்சி நகரை சேர்ந்த, கூலித்தொ-ழிலாளி பெரியசாமி, 67. இவரது தம்பி சிகாமணி. இவரது மகன் செல்வராஜ், 30.நேற்று மதியம், 3:50 மணிக்கு, பெரியசாமி அவ ரது தோட்-டத்தில் இருந்தார். அப்போது செல்வராஜ் வந்து, கொடுவாளால் பெரியசாமியின் தலையை தனியே வெட்டி, கொடூரமாக கொலை செய்தார். ஏத்தாப்பூர் போலீசார், பெரியசாமி தலை, உடலை மீட்டு செல்வராஜை பிடித்து விசாரித்-தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
செல்வராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர். சேலம் அரசு மருத்து-வமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மது போதையில் இருந்த செல்வராஜ், அவரது பெரியப்பா பெரியசாமி-யிடம், மேலும் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் தரா-ததால் கோபமடைந்த செல்வராஜ், கொடுவாளால் பெரியசா-மியை கொடூரமாக கொலை செய்துள்ளார். தொடர்ந்து விசா-ரணை நடக்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.