கடத்த முற்பட்ட ஆட்டோ ஓட்டுனர் கீழே குதித்து தப்பிய இளம்பெண்

1

பெங்களூரு: இளம்பெண்ணை கடத்த முயன்றதாக ஆட்டோ ஓட்டுனர் மீது, போலீசில் பெண்ணின் கணவர் புகார் செய்துள்ளார்.

பெங்களூரில் வசிக்கும் அஜர் கான் என்பவரின் மனைவி, நேற்று முன்தினம் இரவு, ஹொரமாவில் இருந்து, தனிசந்திராவுக்கு செல்ல 'நம்ம யாத்ரி' மொபைல் செயலி மூலம், ஆட்டோ புக்கிங் செய்து பயணம் செய்தார்.

பயணம் செய்தபோது தான் ஆட்டோ ஓட்டுனர் குடிபோதையில் இருப்பதை கவனித்தார். இளம்பெண் கூறிய வழியில் செல்லாமல், ஹெப்பாலை நோக்கி, ஆட்டோவை ஓட்டிச் சென்றார்.

இதுகுறித்து கேட்ட அப்பெண்ணை, தகாத வார்த்தைகளால் ஆட்டோ ஓட்டுனர் திட்டினார்.

இதனால் கோபமடைந்த அப்பெண், ஆட்டோவை நிறுத்தும்படி கூறினார்.

ஆட்டோவை நிறுத்தாத ஓட்டுனர், “முடியாது; வேண்டுமானால் வெளியே குதி” என, அடாவடித்தனம் செய்தார்.

வேறு வழியின்றி ஓடும் ஆட்டோவில் இருந்து அப்பெண் குதித்து தப்பினார்.

இதில் லேசான காயம் ஏற்பட்டது. நடந்த சம்பவத்தை கணவருக்கு மொபைல் போனில் கூறினார். அவர் அங்கு வந்து, மனைவியை அழைத்துச் சென்றார்.

நடந்த சம்பவம் குறித்து, 'எக்ஸ்' வலைதளத்தில் விவரித்து, போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுனரை கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார்.

Advertisement