அண்ணா பல்கலை மாணவி, வேங்கைவயல் விவகாரம்; சட்டசபையில் விவாதிக்க வி.சி.க., கவன ஈர்ப்புத் தீர்மானம்

12

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க வேண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் தரப்பட்டுள்ளது.



இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் வரும் ஜனவரி 6ம் தேதி, காலை 9.30 மணிக்கு கவர்னர் ரவி உரையுடன் துவங்குகிறது. நேற்று (ஜன.,03) சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில், சபாநாயகர் அப்பாவு நேரில் சென்று தமிழக கவர்னர் ரவியை சட்டசபை கூட்டத்தொடரில் உரையாற்ற அழைப்பு விடுத்தார்.


மத்திய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிரான தீர்மானத்தை தமிழக முதல்வர் கொண்டு வந்தால், அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தி நிறைவேற்றப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், இன்று (ஜன.,04) அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை, வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலப்பு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க வேண்டி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் எம்.எல்.ஏ., எஸ்.எஸ்.பாலாஜி கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துள்ளார்.

Advertisement