தி.மு.க. அரசின் தோல்விகளை மடைமாற்ற தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்; அண்ணாமலை குற்றச்சாட்டு
சென்னை: அரசின் தோல்விகளை மடைமாற்றவே தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை சச்சரவாக்க தி.மு.க., முயற்சிப்பதாக தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார்.
@1brஇதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;
தி.மு.க., அரசு, தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்கவும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவினால் ஏற்பட்டுள்ள பொதுமக்களின் கோபத்தைத் திசை திருப்பவும், சட்டமன்றத்தில் பின்பற்ற வேண்டிய விதிகளைச் சுட்டிக்காட்டியதற்காக, தமிழக கவர்னர் மீது பழி சுமத்துவது வாடிக்கையாகி விட்டது. இன்று, கவர்னர், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு,தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஆனால் தி.மு.க., அரசு அதனை மறுத்திருக்கிறது. தி.மு.க., அரசுக்குப் பின்வருவனவற்றை நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
1. கடந்த நவம்பர் 23, 1970 அன்று, மனோன்மணீயம் சுந்தரனார் பிள்ளை எழுதிய அசல் தமிழ்த்தாய் வாழ்த்தைச் சுருக்கி, திருத்தப்பட்ட பாடலை, மாநில அரசின் தமிழ்த்தாய் வாழ்த்து என, முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு அரசாணை மூலம் அறிவித்தார். அரசு தொடர்பான அனைத்துச் செயல்பாடுகள், கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
2. இருப்பினும், 1991ம் ஆண்டு வரை, தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு முன்பாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படவில்லை.
3. 1991ம் ஆண்டு ஜூலை மாதம், ஜெயலலிதா முதல்வராக இருந்த போதுதான், முதல்முறையாக கவர்னர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும், முறையே தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
4. மத்திய அரசின், தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகளின்படி, மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் நடக்கும் முறையான அரசு நிகழ்ச்சிகளில், கவர்னர்/ துணைநிலை கவர்னர் வருகையின் போதும், நிகழ்ச்சியிலிருந்து விடைபெறும்போதும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்.
இந்த உத்தரவு, 1971ம் ஆண்டின் தேசிய மரியாதைக்கான அவமதிப்பு தடுப்புச் சட்டத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்கு நீதி வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், பொதுமக்களின் கவனத்தை தி.மு.க., அரசின் நிர்வாகத் தோல்வியிலிருந்து திசைதிருப்ப முயற்சி செய்ய வேண்டாம் என்றும் முதல்வர் ஸ்டாலினை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கவர்னர் ஆர்.என்.ரவி வகுத்துள்ள விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மட்டுமே தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறார். இதனை ஒரு பெரிய சச்சரவாக்க முயற்சிப்பது, தி.மு.க., அரசின் தோல்விகளை மடைமாற்றுவதற்காகவே என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
கவர்னர் உரை தொடங்கும் முன்னரும், நிறைவு பெற்றதும், தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் தேசிய கீதத்தை வாசிப்பதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே பா..ஜ., நிலைப்பாடு.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
வாசகர் கருத்து (38)
அப்பாவி - ,
07 ஜன,2025 - 06:18 Report Abuse
தமிழ்த்தாய்க்காக இன்னொருதரம் சாட்டையால் அடிச்சுக்கணும்.
0
0
Reply
K V Ramadoss - Chennai,இந்தியா
07 ஜன,2025 - 01:47 Report Abuse
ஹிந்தி நன்றாக வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. தமிழ் நாட்டை முன்னேற விடாத மூடர்களுக்குத்தான் வயிறு எரிகிறது.
0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
06 ஜன,2025 - 20:17 Report Abuse
திருட்டு திராவிட கும்பலை அடித்து உதைத்து திருத்த வேண்டிய நேரம் இது..௧௯௭௬க்குப் பிறகு துணை ராணுவப் படைகளிடம் இவர்கள் அடி வாங்கவில்லை.. பிரிட்டிஷ் அரசு காலம் போல திருட்டு திராவிட கும்பலை குற்றப் பரம்பரை என அறிவித்து உட்கார்ந்தால் அடி எழுந்தால் உதை அடுக்கு மொழியில் பேசினால் குமட்டில் குத்து என்று பயத்தை ஜீன்களில் ஏற்றி விடவேண்டும்... இல்லை என்றால் தமிழகம் இன்னொரு காஷ்மீர் ஆக மாறும் வாய்ப்புகள் அதிகம்... ஈழத்தமிழர்கள் போல திராவிடத்தின் திருட்டு கும்பலை நசுக்கி தேய்த்து விட வேண்டும்.. மனித உரிமைகள் இவர்களுக்கு பொருந்தாது..
0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
06 ஜன,2025 - 20:00 Report Abuse
இந்த விவகாரத்தில், அந்த பாட்டி நிம்மதியாக உள்ளார். அவரை தேடும் பணி சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
06 ஜன,2025 - 19:09 Report Abuse
ஒரு இறைவனை, அல்லது இறைவியை செயற்கையாகப் படைத்து வணங்குவது மன்னிக்கத் தகாத ஹராம் ..... ஆனாலும் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை தெலுங்கன் கள்ளத்தனமாக காதகம் செய்து மாற்றினான் ... தமிழன் ஏன் அனுமதித்தான் ????
0
0
Reply
Dhurvesh - TAMILANADU,இந்தியா
06 ஜன,2025 - 19:06 Report Abuse
கோடநாடு எஸ்டேட்டுல சிசிடிவியை ஆஃப் செய்ய சொன்ன அந்த சார் யாரு?
APPOLLO HOSPITAL ல சிசிடிவியை ஆஃப் செய்ய சொன்ன அந்த சார் யாரு? நீர் பாவயாத்திரை சென்று நல்ல COLLECTION அடிச்சி இருக்குறீர் நீர் அடுத்த அரசியல் வியாதியை சொல்ல அருகதை அற்றவர்
0
0
பேசும் தமிழன் - ,
06 ஜன,2025 - 21:10Report Abuse
நீங்க என்ன தான் முட்டு கொடுத்தாலும் ...மடை மாற்றும் வேலையை பார்த்தாலும் .....அந்த பிரியாணி சார் யார் என்று தெரியாமல் ....தமிழக மக்கள் விடமாட்டார்கள் .
0
0
theruvasagan - ,
06 ஜன,2025 - 21:52Report Abuse
அப்ப 2021ல ஆட்சிக்கு வந்ததில் இருந்து இன்றுவரை அந்த ரெண்டு விஷயத்திலும் சுவிட்சை அணைச்சது எந்த சார்னு கண்டுபுடிக்கலையா. எதனால அப்படி.
0
0
Reply
Dhurvesh - TAMILANADU,இந்தியா
06 ஜன,2025 - 18:55 Report Abuse
சட்டசபைக கூட்டம் நடத்துவதை அரசு விழா என்று கூறுகிறார் . ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் வேறு வேறு பொருள் உண்டு என்பதை அறியவில்லை. சட்டசபைக் கூட்டம் ஒரு நாள் அரசு விழா அல்ல .அது ஒரு தொடர் நிகழ்வு.அவரவரக்குத் தேவையானபடி நெறிகாட்டுதலை மாற்றுதல் கூடாது.
0
0
Kasimani Baskaran - Singapore,இந்தியா
06 ஜன,2025 - 22:26Report Abuse
கவர்னர் பங்கேற்கும் அணைத்து நிகழ்ச்சிகளிலும் முதலிலும் கடைசியிலும் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது அரசியலமைப்புச்சட்டம் சார்ந்த மத்திய அரசின் தொடர்ந்து அமலில் இருக்கும் ஜனாதிபதி ஒப்புதல் பெற்ற அரசாணை. ஆகவே மரபு, மக்காச்சோளம் என்றெல்லாம் சொல்லி உருட்ட முடியாது. தேசிய கீதம் பாடப்பட்ட பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடவேண்டும்.
0
0
Reply
ஸ்டாலின் ::"நான் திராவிட இனத்தை சேர்ந்தவன்" - செந்தமிழ்நாடு,இந்தியா
06 ஜன,2025 - 18:54 Report Abuse
பாவம் இவர் அரசியல் வாழ்வில் தான் எத்துணை தோல்வி , சரி நீர் இப்போ என்னவா இருக்குறீர் , இன்னமும் waiting லிஸ்டில் தான் இருக்குறீரா வந்து 2 மாதம் ஆகியும் RESTORE ஆக வில்லையா இதிலும் தோல்வி தானோ
0
0
Reply
சம்பா - ,
06 ஜன,2025 - 18:12 Report Abuse
சும்மா சும்மா. குற்றம் சாட்டி பயன் இல்ல
வேற வழில
0
0
Reply
Apposthalan samlin - sulaymaniyah,இந்தியா
06 ஜன,2025 - 17:50 Report Abuse
அண்ணாமலை தன் மனைவி பேரில் உள்ள சொத்துக்காகவும் மச்சான் பேரில் உள்ள சொத்துக்காகவும் இந்த மாதிரி பேச கூடாது
0
0
கோபாலகிருஷ்ணன் பெங்களூர் - ,
06 ஜன,2025 - 18:03Report Abuse
அண்ணாமலையின் மனைவி சொத்தும், மச்சான் சொத்தும் நீங்க தான் ரெஜிஸ்டர் செய்தீர்களா சப் ரெஜிஸ்டர் "சார்"
0
0
Bhakt - Chennai,இந்தியா
06 ஜன,2025 - 19:27Report Abuse
தமிழகத்துக்கு ஒரு தீவிர வியாதி
0
0
N.Purushothaman - Cuddalore,இந்தியா
07 ஜன,2025 - 10:29Report Abuse
நீங்க தாங்க ஒரிஜினல் திருட்டு திராவிடன் அல்லது அனுதாபி ....எந்த செய்திக்கு என்ன பதில் கொடுத்துகினு இருக்கீங்க ....
0
0
Madras Madra - Chennai,இந்தியா
07 ஜன,2025 - 15:04Report Abuse
ரொம்ப முக்காதீங்க
0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement