கவர்னரை கண்டித்து நாளை போராட்டம்: தி.மு.க., அறிவிப்பு

39

சென்னை: கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாளை(ஜன.7) போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.

தமிழக சட்டசபையின் புத்தாண்டு முதல் கூட்டம் இன்று துவங்கியது.சபை நடவடிக்கை துவங்கும் முன்னதாக தேசிய கீதம் பாடுவது மரபு, ஆனால் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இது தவறு என்றும்,அரசியலமைப்பு சட்டம் அவமதிக்கபடுவதாக கூறி சபை நடவடிக்கையை புறக்கணித்து கவர்னர் வெளியேறினார்.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் ஜன.7 ஆம் தேதி கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க., அறிவித்துள்ளது.
மாவட்ட தலைநகரங்களில் நாளை காலை 10 மணியளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ., ஆட்சி இல்லாத மாநிலங்களில் கவர்னர்கள் தனி ராஜாங்கம் நடத்துகிறார்கள். இதைக் கண்டித்து நாளை போராட்டம் நடைபெறும் என்று தி.மு.க., தெரிவித்துள்ளது.

Advertisement