ஆப்கன் மீது பாக்., தாக்குதல்: இந்தியா கண்டிப்பு

1

புதுடில்லி:ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழித் தாக்குதலை இந்தியா கண்டிக்கிறது என்று வெளியுறவு அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் 24 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் பாக்டிகா மாகாணத்தின் பர்மால் மாவட்டத்தில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட குறைந்தது 51 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் கண்டித்துள்ளது.


இது குறித்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அளித்த பேட்டியில்,

அப்பாவிகள் மீதான எந்தவொரு தாக்குதலையும் கண்டிப்போம். தனது சொந்த உள் தோல்விகளுக்கு அண்டை நாடுகளை குற்றம் சாட்டுவது பாகிஸ்தானின் பழைய வழக்கம்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் மீதான வான்வழித் தாக்குதல்கள் குறித்த ஊடக அறிக்கைகளை நாங்கள் கவனித்தோம். இதில் பல விலைமதிப்பற்ற உயிர்கள் கொல்லப்பட்டன.இது தொடர்பாக ஆப்கானிஸ்தான் செய்தித் தொடர்பாளரின் பதிலையும் நாங்கள் குறிப்பிட்டுள்ளோம்.

இவ்வாறு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

Advertisement